Close
நவம்பர் 22, 2024 7:33 காலை

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு பயிற்சி முகாம்: புதுகை ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஜெஜ் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் பேசுகிறார், ஆட்சியர் கவிதாராமு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கானஉயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து நடத்தும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, .துவக்கி வைத்து பேசியதாவது:

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது வாழ்க்கையினை சிறப்பானதாக மாற்றிக்கொள்வதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மற்றும் MMT & NURTURE அமைப்பும் இணைந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மாணவ, மாணவிகளிடையே பொறியாளர், மருத்துவர், இந்திய குடிமைப் பணிகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கும். இந்நிலையில் இப்பயிற்சி வகுப்பு முகாம் மூலமாக உங்களது குறிக்கோல்களை நிறைவேற்றுவதற்கும், உயர்கல்வியில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய புதிய பாடப் பிரிவுகள் குறித்தும், இப்பாடப் பிரிவுகள் வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் குறித்தும், உயர்கல்வி வழிகாட்டு வல்லுநர்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும் மாணவ, மாணவிகள் அனைவரும் தாங்கள் கொண்டுள்ள குறிக்கோல்களை நிறைவேற்றுவதற்கு முதலில் தங்களிடமிருந்து தன்னம்பிக்கை வளர வேண்டும். இந்த தன்னம்பிக்கை மூலமாக ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து தங்களது வாழ்க்கையினை வெற்றிகரமாக அமைத்து கொள்வதற்காக மாணவ, மாணவிகள் அனைவரும் இப்பயிற்சி முகாமில் வழங்கப்படும் முழு தகவல்களையும் குறிப்பு எடுத்துக்கொண்டு தங்களது எதிர்கால கனவுகளை நினைவாக்கிக் கொள்வதற்கு முதல் விதையினை இங்கிருந்து தொடங்கிட வேண்டும் என்றார்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

இப்பயிற்சி வகுப்பில் MMT & NURTURE அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி சாக்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு சாக்யா, உத்வேக பேச்சாளர்முகமது யாக்யா, உயர்கல்வி வழிகாட்டல் பேச்சாளர் சங்கமித்திரை ஆகியோர் உயர்கல்வி வழிகாட்டல் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)ஆ.ரமேஷ், தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) என்.பிரவீனா மேரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top