Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நேரடி வளாகநேர்காணல்: பணி வாய்ப்பு பெற்ற 22 மாணவர்கள்

புதுக்கோட்டை

திருமயம் சண்முகநாதன்பொறியியல் கல்லூரியில் நடைபெற்றவளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுடன் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்சொர்ணலதா, ஜேபிஎம் ஆட்டோலிமிடெட் நிறுவன மனிதவளத்துறை அதிகாரி புருஷோத்தமன், இயந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் மோகன் ஆகியோர்.

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நேரடி வளாக நேர்காணலில்  22 மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டனர்.

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு இயந்திரவியல்,  மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான நேரடி வளாக நேர்காணல் ஏப்ரல்-27 (வியாழக்கிழமை)நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு வாழ்த்துரை வழங்கினார்.  சென்னை ஜேபிஎம்ஆட்டோ லிமிடெட் நிறுவன மனிதவளத் துறை அதிகாரி புருஷோத்தமன் தலைமை உரை நிகழ்த்தி வளாக நேர்காணலை நடத்தினார்.

இவ்வளாக நேர்காணல் எழுத்துத்தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இந்தவளாக நேர்காணலில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேர்காணலில் 22 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து  தேர்வான அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கபட்டன.

ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் துறைத் தலைவர் டாக்டர் மோகன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக் குழுவினர் செய்திருந்தனர். நிறைவாக கல்லூரி உதவி வேலை வாய்ப்பு அலுவலர் திவ்யசொப்னா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top