புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் பி.எஸ்.கருப்பையா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அன்னபூரணி வரவேற்றார்.
புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் பி.எஸ்.கருப்பையா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அன்னபூரணி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் இளங்கோவன் கலந்து கொண்ட குழந்தைகளுக்கான பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
பின்னர், தாளாளர்பி.எஸ்.கருப்பையா மழலையர்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தி பேசியதாவது :
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை பெற்றோர்கள் தங்கள் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து பெற்றோர்கள் கேட்க வேண்டும்.
பிள்ளைகளோடு அன்பாக நட்பாக பேசிப் பழகும் பெற்றோர் களையே மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். பிள்ளைகளின் வெற்றியை உறுதி செய்வது பெற்றோர்களின் கைகளின்தான் உள்ளது. பள்ளியை விட்டு வீடு வந்து சேரும் குழந்தைகளிடம் பெற்றோர் கலந்துரையாட வேண்டும்.
தங்களது வேலைகளை ஒதுக்கி வைத்து தினமும் இரண்டு மணி நேரம் பாடங்களை கற்க செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவுகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வைக்க வேண்டும் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு தங்களது குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்த்தெடுக்க வேண்டியது இங்குள்ள பெற்றோர்கள் அனைவரது கடமை என்றார் பி.எஸ். கருப்பையா.
நிகழ்வில் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் மாணவ , மாணவிகள். பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்தனர்.