Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

பிளஸ்.2 தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.81 % தேர்ச்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை,திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ். 2 அரசுப் பொதுத் தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்  92.81 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி 1.23% அதிகமாகும்.

மாவட்டத்தில் உள்ள 106 அரசு மேனிலைப்பள்ளிகள்,  18 அரசு உதவி பெறும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகள் 21 சுயநிதி,மெட்ரிக் பள்ளிகள் உள்பட மொத்தம் 47 பள்ளிகள் உள்பட 174 பள்ளிகளைச் சோ்ந்த 19,123 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினர்.  இதில், 8,932 மாணவர்கள், 9,727 மாணவிக ளும் என  மொத்தம் 17,749 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.81 சதம்.

மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் நிகழாண்டில் 23-ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.58 சதவிகிதம் பெற்று, 29-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 174 பள்ளிகளில், 47 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 9 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 பள்ளிகள் உதவி பெறும் பள்ளிகள். 34 பள்ளிகள் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆகும்.
மாங்காடு, சிலட்டூர், நெடுவாசல், கரூர், சூரியூர், கீழக்குறிச்சி, நார்த்தாமலை, காளியராயன்விடுதி, லெம்பலக்குடி ஆகிய ஊர்களில் உள்ள 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலப் பள்ளி முள்ளங்குறிச்சியில் உள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 78 பேரில், 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  76.92 சதவிகிதம் தேர்ச்சி ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top