Close
நவம்பர் 22, 2024 4:38 காலை

பிளஸ் 2 தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி: புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சாதனை

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை

பிளஸ் 2  பொதுத் தேர்வில் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 22 ஆண்டுக ளாக தொடர்ந்து 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண் டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கம்போல் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள் ளார்கள். மாணவர்கள் 52, மாணவிகள் 25 மொத்தம் தேர்வு எழுதிய 77 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஆவிச்சி விஸ்வநாதன், ஆயிஷா ஷிஃபானா, முத்து வடிவேல், அவினாஷ், சுவேதா ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

ஆவிச்சி விஸ்வநாதன் வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளியல், வணிக கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 591 / 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆயிஷா ஷிஃபானா வணிகவியல், கணக்கு பதிவியல், கணிணி பயன்பாடு ஆகிய மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 590 / 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

முத்து வடிவேல் கணிணி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 589 / 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அருணன் வேதியியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 572 / 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கணிணி அறிவியல் பாடத்தில் முத்துவடிவேல், சபரி கணேஷ், கோமதி, ஹரிஹரன், தரணி ஆகிய ஐந்து பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணிணி பயன்பாடு பாடத்தில் ஆயிஷா ஷிபானா, ஃபஹத் ஆகிய இருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வணிகவியல் பாடத்தில் ஆவிச்சி விஸ்வநாதன், ஆயிஷா ஷிபானா, காயத்ரி ஆகிய மூவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணக்குப் பதிவியல் பாடத்தில் ஆவிச்சி விஸ்வநாதன், ஆயிஷா ஷிபானா ஆகிய இருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் அருணன், சபரி கணேஷ், ஆதித்யா ஆகிய மூவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமசுந்தரி, கௌரி.

ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி சுதா, கோகிலா, சுகுணா, ராஜாமணி, ஜெயசுதா, பவானி, சரவணபவா, அழகன், பிரகாஷ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், செல்வராஜ், ரவிக்குமார், பால்ராஜ், பாலமுருகன் மற்றும் மேலாளர் ராஜா, காசாவயல் கண்ணன், உதயகுமார், நீலகண்டன், சரசு ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.

 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் களை மட்டுமல்ல மதிப்புமிக்க எண்ணங்களை வளர்க்கும் பள்ளி என பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top