Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிக்காட் டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய பாரத திட்டத்தில் பணிபுரிந்த தன்னார்வலர்களின் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்நிகழ்வில் கலந்து கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் சான்றிதழ் வழங்கிய பாராட்டி பேசியதாவது:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்
15 வயது முதல் 55 வயது வரை உள்ள எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 45 மையத்தை சிறப்பாக செயல்படுத்திய தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள். இத்திட்டத்தை கிராமப்புற பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி எழுத படிக்க கற்றுக் கொண்டுள்ளனர்.

தினசரி செய்தித்தாள்,வங்கி பணம் எடுத்தல், வாழ்வியலும் ஆளுமையும், பேரிடர் மேலாண்மை,சாலை பாதுகாப்பு அஞ்சலகத்தில் பணம் செலுத்தல், எண்கள் அறிவோம் சட்டங்கள் அறிவோம் என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம்,இலவச கல்வி சட்டம்,போக்சோ சட்டம் போன்ற சிறப்பாக கற்றுக் கொண்டுள்ளனர்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.  இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பா ளர் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ்குமார் ராஜேஸ்வரி, சங்கிலிமுத்து சிறப்பாசிரியர்கள் ரம்யா,பிரியா ராதா ராணி, கணக்காளர்கள் ராஜேஸ்வரி, ராஜலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top