புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்துவிளக்கேற்றி விழா தொடங்கிது.
விழாவுக்கு, வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் எம்.இளங்கோவன் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை வாசித்தார்.
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் எம்.பழனியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, பி.எட்., பல்கலைக் கழகத் தேர்வில் கல்லூரியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளும், முதல்வர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார்.
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா, பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் முதல்வர் ஜீவானந்தம், உதவிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் முனைவர் எம்.திருவள்ளுவன் நன்றி கூறினார்.