புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகம், கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
கந்தர்வக் கோட்டையில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்த பேசியதாவது:
கோடை காலங்களில் விடுமுறையை பயனுள்ளதாக போக்குவிதமாக வானவில் மன்றமும், இல்லம் தேடி கல்வி மையமும் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தி வருவது சிறப்பு மிக்க பணியாகும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக எளிய அறிவியல் பரிசோதனைகள் மூலம் அறிவியல் சிந்தனை தூண்டப்படுகிறது. மாணவர்கள் கோடைகாலங்களில் உங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினந்தோறும் தினசரி நாளிதழ்களை வாசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் குமார் வரவேற்றார். இல்லம் கல்வி மைய ஒருங்கிணைப் பாளர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.
வானவில் மன்ற கருத்தாளர்கள் தெய்வீக செல்வி, வசந்தி ஆகியோர் மாணவர்களுக்கு காகிதம் மடிப்பு கலை, எளிய அறிவியல் பரிசோதனை, கணித புதிர்கள் உள்ளிட்டவர்களை செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய தன்னார் வலர்கள் பிரீத்தி, சுகுணா தேவி, பாப்பு, குணசுந்தரி, இலக்கியா, மாரியம்மாள், சரஸ்வதி, மணியம்மை, முத்துலெட்சுமி , சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.