Close
நவம்பர் 22, 2024 11:09 காலை

தஞ்சையிவ் கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற பூண்டி வாண்டையார் நினைவேந்தல்

கல்விக் காவலர் துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இன்று மாலை  கல்விக் காவலர் கி.துளசி ஐயா வாண்டையார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல், தென்னாட்டு தெய்வமகன் கி.துளசி ஐயா வாண்டையார் புகழுரைகள் நூல் வெளியீடு, கல்விக் காவலர் கி.துளசி ஐயா வாண்டையார் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா  நடைபெற்றது .

காவிரி டெல்டா மண்டலத்தில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து, கல்லூரி மற்றும் முதுகலை படிப்பிற்கு சிரமப்பட்ட நிலையில் கி.துளசி ஐயா வாண்டையார்  தனது ஊரான பூண்டியில் பூண்டி புஷ்பம் கல்லூரியை கடந்த 1956 -இல் தனது சொந்த செலவில் கட்டினார்.

தஞ்சாவூர்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இந்த கல்லூரி படிப்பார்வமிக்க மாணவர்கள் குறைந்த கட்டணத்தில், படித்து முன்னேறுவதற்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு மற்ற இடங்களில் மதிப்பை அளித்தது .

கல்லூரியில் கண்டிப்பு கறாராக அமல் படுத்த பட்டது.கல்லூரி சாதி,மத பேதமின்றி சமத்துவத்தை போதிக்கும் போதி மரமாகவும் திகழ்ந்தது.இந்த பெருமைகளுக்கு உரித்தான ஐயாவிற்கு கல்விக் காவலர் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தது.

நிகழ்விற்கு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் து.செல்வம் தலைமை வகித்தார்.தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், ஐயா -வின் புகழுரைகள் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

தஞ்சாவூர்
பூண்டி வாண்டையார் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றோர்

தஞ்சை மாநகர துணை மேயர் மருத்துவர் அஞ்சும் பூபதி கி.துளசி ஐயா வாண்டையார் கல்வி உதவித் திட்டத்தை துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங், பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வர் உரு.இராஜேந்திரன், காவல்துறை முன்னாள் துணை கண்காணிப்பாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரையாற்றினார்கள்.

முன்னதாக முனைவர் வி.பாரி  வரவேற்று பேசினார். முனைவர் எழிலரசன் நன்றி கூறினார்.

நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக துளசி ஐயா வாண்டையார் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top