ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல் நிலை முதலாம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல்நாள் வகுப்புகள் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவிற்குபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் புதுமையாய் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் சண்முகப்பிரியா,அனுஷியாபேகம், நாகலெட்சுமி குத்துவிளக் கேற்றி நிகழ்வை தொடக்கி வைத்தனர்.
புதியதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களும் ரோஜாமலர்கள் கொடுத்து வரவேற்றனர். முதல் நாள் வகுப்பிற்கு வந்துள்ள மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களை பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி, பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் காவியாமூர்த்தி மற்றும் பேராசிரியர் அபிராமிகருப்பையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்திரனாக ஆசிரியர் மனசுதிட்ட ஒருங்கிணைப் பாளர் கவிஞர்சிகரம்சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
இன்று புதிதாய்பிறந்தோம் என்கிற எண்ணத்தோடு முதல் நாள் வகுப்பறைக்கு வந்திருக்கின்ற மாணவக் கண்மணிகள் அனைவரும் நம்மால் முடியும் நம்மால் எல்லாம் முடியும்” என்ற சிந்தைனையை மனதில் நிறுத்துங்கள். இந்தப் பள்ளியிலேயே படித்து இந்தப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் நிவேதிதாமூர்த்தியும், காவியா மூர்த்தியும் உங்கள் முன்னாள் இருக்கின்றார்கள். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கடந்த கல்வி ஆண்டில் பலமாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்கள். நீங்கள் வரும் கல்விஆண்டில் மிகவும் சிரத்தையோடு உழைத்து மாநில அளவிலான சாதனை பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும்.
அதற்கு ஆகச்சிறந்த ஒரு வழி மாணவர்கள் உங்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உண்மையாக இருந்தாலே போதும். உங்களை தன் இரண்டு கண்களைப் போல காத்துக்கொண்டு பள்ளிமுதல்வர்கவிஞர்தங்கம்மூர்த்தி எப்போதும்உங்கள் அருகிலேயே இருக்கின்றார். உங்கள் வெற்றியை அவரிடம் சமர்ப்பணம் செய்யுங்கள்” என்றார் சதீஷ்குமார்.
பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல்,ஒருங்கிணைப்பாளர் கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் கமல்ராஜ், துர்காதேவி, ஜெயசுதா, தனம்பாலமுருகன், பால்ராஜ், சின்னையா, சத்தியராஜ், ஆறுமுகம், மேலாளர் ராஜா, மற்றும் திரளான ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முன்னதாக ஆசிரியர் கனியன்செல்வராஜ் வரவேற்றார். நிறைவாக அபிராமசுந்தரி நன்றி கூறினார். விழாவினை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.