Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்

புதுக்கோட்டை

குளத்தூர் மகாத்மா பள்ளி மாணவர்களுக்கு அனைத்து புத்தகங்களையும் சீருடைகளும் பள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை   குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளிக்கு  மகிழ்ச்சியுடன் வருகை தந்த மழலையர்கள்  நெற்றில் திலகமிட்டு ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.

புதுக்கோட்டை
முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை திலகமிட்டு வரவேற்ற ஆசிரியர்

புதுக்கோட்டை  குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு உற்சாகமாக மகிழ்ச்சியுடன் மழலையர்கள் மாணவ, மாணவியர்கள் வருகை தந்தனர்.

வருகை புரிந்த அனைத்து மழலையர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர்  ஆசிரியர்கள் வரவேற்றனர்  .

மழலையர்களை ஆசிரியர்கள்   நெற்றில் திலகமிட்டு இனிப்புகள், கொடுத்து புன்னைகையுடன் வரவேற்றனர் பழைய புதிய  மாணவ மாணவியர்கள் மழலையர்கள்    தங்களது வகுப்புகளில் அமர்ந்து நட்பை பறிமாறிக் கொண்டனர்.

புதுக்கோட்டை
மகாத்மா மழலையர் பள்ளியில் நட்பை பரிமாறிக்கொண்ட மாணவர்கள்

அனைவருக்கும் 2023-24 கல்வி ஆண்டுக்கான அனைத்து புத்தகங்களையும் சீருடைகளும் பள்ளியின் தாளாளர் டி.ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர்,  ஆசிரியர்கள் வழங்கினர். பின்னர்  பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர். முதல் நாளன்று  பெற்றோர்களும் திரளாக வந்து தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுச்சென்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top