Close
செப்டம்பர் 20, 2024 5:45 காலை

பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு

புதுக்கோட்டை

பள்ளிக்கு வந்த மழலையரை வரவேற்ற வெங்கடேஸ்வரா பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தொடங்கி முதல் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு  மலர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க  வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை – திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வேறெங்கும் இல்லாத புதுமையாகஒவ்வொருஆண்டும் பள்ளி துவங்கும் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும்.

புதுக்கோட்டை
மாலையணிவித்து வரவேற்கப்பட்ட மழலையர்

அந்தவகையில் 2023–24 புதியகல்விஆண்டின் பள்ளி தொடக்க நாளில் பள்ளியின் வாசலில் பலூன் தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புத்தம்புது பட்டாம் பூச்சிகளாகப் பறந்து வருகின்ற எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மழலைச் செல்வங்களுக்கு மலர் மாலை அணிவித்தார்.  மாணவர்களே ரிப்பன் வெட்டி முதல் நாள் பள்ளியில் அடியெடுத்து வைத்தனர்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு ரிப்பன் வெட்டி அடிஎடுத்து வைத்த மழலையர்

ஆசிரியர்கள் பூங்ககொத்து, சாக்லேட், பஞ்சு மிட்டாய் மற்றும் புதிய வாட்டர் பாட்டில் கொடுத்து ஆராத்தி எடுத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் இன்முகத்துடன் வரவேற்றனர். குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பஞ்சு மிட்டாய்கள் வழங்கப்பட்டன.

சவ்வு மிட்டாயில் குழந்தைகளுக்கு கடிகாரம்,மோதிரம் போன்றவைகளை செய்துவழங்கியது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளை ‘மிக்கி மௌஸ் பொம்மைகள்’கைகுலுக்கி வகுப்புக்கு அழைத்துச் சென்றன.

விழாவில் பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கள்; கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலைச் செல்வங்களை வரவேற்று வாழ்த்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top