ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல் நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நியூ ஹரிஸோன் அக்காதெமியுடன் இணைந்து நீட் , ஜே.இ.இ பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேர்ந்தே உயர்த்துவோம் என்னும் தலைப்பில் நடைபெற்ற நி்கழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி
தலைமை வகித்து பேசியது:
இன்றைய நிலையில் பள்ளியிறுதி வகுப்புக்குப்பிறகான படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. அப்படி எழுதுகின்ற நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள்தான் நல்ல தரமான கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர முடியும்.
அதற்கான பயிற்சிகளைத் தேடி பெரு நகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த ஆண்டு முதல் நம் பள்ளியில் நீட்
மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை நியூ ஹரிஸோன் அகாதெமியுடன் இணைந்து வழங்குகின்றோம்.
மேலும் மாணவர்கள் ஆடிட்டர் படிப்பைத் தெரிவு செய்ய சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பிரசாத் ஆடிட்டருடன் இணைந்து நம் பள்ளியில் வழங்க உள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலட்சியங்களைக்கேட்டறிந்து அவர்கள் கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் தங்கம்மூர்த்தி.
நியூ ஹரிஸோன் அகாதெமியின் இயக்குநர் டேவிட் ரிச்சர்ட் பார்டன் பேசும்போது ” இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை நீட்இ, ஜேஇஇ பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டு மாணவர்கள் நன்கு உழைத்துப் படித்து இதுபோன்ற தேர்வுகளில் முதல் ரேங்க் மதிப்பெண் வாங்கி சாதிக்கின்றார்கள்.
தமிழ்நாட்டின் பிரபஞ்சன் பெற்ற 720/720 -பிரபஞ்சத்தையே அதிசயிக்கத் தக்க நிகழ்வாகும்.ஆகவே மேல்நிலை முதுலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் பாடங்களை மதிப்பெண்களுக்காகப்படிக்காமல் இலட்சியத்தை அடையும்படி இரவு பகல் பாராமல் உழைத்துப் படித்து வெற்றிக்கனியைச் சுவைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அபிராம சுந்தரி வரவேற்றார். நிறைவாக துணை முதல்வர் குமாரவேல்
நன்றி கூறினார்.
இதில், பங்கேற்ற ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர்.
விழாவில்,ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி. மேலாளர் ராஜா, ஆசிரியர் கணியன் செல்வராஜ், நியூ ஹரிஸோன் அமைப்பினைச் சேர்ந்த கண்ணன், கோபு,
கலைவாணி, இராஜகோபால் ஆடிட்டர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டர். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.