Close
நவம்பர் 25, 2024 12:05 காலை

கம்பன் விழா போட்டிகளில்  10 வது ஆண்டாக அதிக பரிசுகள் வென்று பள்ளி ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி சாதனை

புதுக்கோட்டை

கம்பன் விழா போட்டிகளில் பரிசுகளை அள்ளி வந்த வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கம்பன் பெருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வழக்கம் போலவே பத்தாவது ஆண்டாக அதிக பரிசுகளை வென்றுள்ளனர்.

எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் நடத்தப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியிலும், கம்பராமாயணப் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியிலும் வெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அதிக அளவிலான பரிசுகளை வென்றுள்ளனர்.

கம்பராமாயணப்பாடல் ஒப்புவித்தல் போட்டியில் முதல் வகுப்பு மாணவர் பி.கருணாசாகர், இரண்டாம்பரிசும், ரோஜாஸ்ரீ சிறப்பிடமும் பெற்றனர். இரண்டாம் வகுப்பில் பி.லிங்கேஸ்வரன், ஆ. ஆண்டோமிலானி ஆகியோர் முதல்பரிசும், மூன்றாம் வகுப்பில் கா.வீரகேசவ், வெ.சபரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர்.

புதுக்கோட்டை
கம்பன் விழா போட்டிகளை பரிசு வென்ற மாணவர்களுடன் பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி, சிகரம் சதீஷ் ஆகியோர்

நான்காம் வகுப்பில்வெ.தேவிகா, ஜெ.அதியன், ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். ஐந்தாம் வகுப்பில் வி.தேவதர்ஷன் இரண்டாம் பரிசும், சு.வர்ணிகாஸ்ரீ சிறப்பிடமும் பெற்றனர். ஆறாம் வகுப்பு அ.அதியன் முதல்பரிசும் வே. யாழினி மூன்றாம் பரிசும் ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பில் கா.லோகித் மூன்றாமிடமும் ப.சர்விகா சிறப்பிடமும் பெற்றனர். ஒன்பதாம் வகுப்பு பேச்சுப் போட்டியில் உ. உதயரிஷ்னியா முதல்பரிசும், அ. அட்சயாஸ்ரீ இரண்டாம் பரிசும்பெற்றனர்.

மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு சா.ஸ்ரீ.ஹாசினி முதல் பரிசும், சு.கோபிகாஸ்ரீ மூன்றாம் பரிசும் பெற்றனர். மாவட்ட அளவில் அதிக அளவில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்துகொண்டு அதிகஅளவில் பரிசுளை வென்று தொடர்ந்து பத்தாம்ஆண்டாகவெற்றிக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

பரிசுகள்..கம்பன் பெருவிழா நிறைவு நாளில் வழங்கப்படும். கம்பன்கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி மற்றும் ஆசிரியர்மனசு  திட்டமாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள்  வாழ்த்திப் பாராட்டினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top