தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் சேராத, பதிவு செய்யாத மாணவ, மாணவிகள் மேற்கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, வழிவகை செய்யும் விதமாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி‘உயர்வுக்குப் படி’என்ற தலைப்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து தொடர்புடைய அரசுதுறை களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்டபள்ளிகளில் பயின்ற மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து டான்பாஸ்கோமெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 27.06.2023 அன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு“உயர்வுக்குபடி” குறித்த வழிகாட்டு தல் கையேடும் வழங்கினார்.
இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் கலந்து கொண்டு தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்பு விவரங்கள் மற்றும் தற்போதைய காலியிடங்கள், அதற்கான கட்டண விவரங்கள் குறித்து அரங்கு அமைத்து துண்டு பிரசுரங்கள் வழங்குவதோடு, விருப்பம் உள்ளமாணவ மாணவிகளை தங்கள் கல்லூரியில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டதோடு,வழிகாட்டுதலும் வழங்கினர்.
மேலும், இங்கு தனித் தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி, தங்கி பயில்வதற்கான விடுதி வசதிகள், இட ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் தொடர்பாக வழிகாட்டப்பட்டது.
மேலும்,வங்கிகள் வாயிலாக கல்விகடன் பெறுவதற்கான அணுகு முறைகள்,குறுகிய காலதிறன் பயிற்சிகள் குறித்த அனைத்து விவரங்களும் மற்றும் மாணவ மாணவிகள் மனோதிடத்துடன் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பதற் கான வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டன.
முக்கியமாக மாணவ மாணவிகள் உயர் கல்வி நிறுவனங்க ளில் சேர்வதற்கு ஏதுவாக சாதிச்சான்று, வருமானச்சான்று, முதல் தலைமுறைபட்டதாரி சான்று போன்றசான்றிதழ்களை இங்கேயே பெறுவதற்கு ஏதுவாக இ-சேவை மையம் ஏற்படுத் தப்பட்ட தோடு, விரைவாக சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில்,முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களும்,மண்டல இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) தஞ்சாவூர் அவர்களும் மற்ற இதர அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்து தல் தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மைய உதவி இயக்குநர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) நன்றி கூறினார்.