Close
செப்டம்பர் 19, 2024 9:02 காலை

காஞ்சிக்கோயில் அரசுப்பள்ளிக்கு மேசை, இருக்கை வழங்கல்

ஈரோடு

காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 9 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் வழங்கினார். உடன் வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதிக்குள்பட்ட காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 9 லட்சம் மதிப்பில் பெஞ்ச், டெஸ்க் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் வழங்கினார்.

பெருந்துறை ஒன்றியம் காஞ்சிகோயில் பேரூராட்சி காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்காக தேவையான பென்ச், டெஸ்க் வழங்க வேண்டுமென பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நிதி 9 லட்சம் மதிப்பீட்டில் 55 செட் டெஸ்க், பென்ச் காஞ்சிக்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

பெருந்துறை

இந்நிகழ்ச்சிக்கு பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக

தோப்புக்காட்டு காலனி பகுதியில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கழக கொடி ஏற்றி வைத்து கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் கே பி எஸ் மணி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top