புதுக்கோட்டை சிவபுரம், எம்ஆர்எம். இன்டர்நேஷனல் பள்ளியில் சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத நாள் எனும் நிகழ்வை முன்னிட்டு, சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
இதை முன்னிட்டு புதுக்கோட்டை, சிவபுரம், எம்ஆர்எம். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சிவபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளில் கிராம மக்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பள்ளி மாணவர்களால் பிளாஸ்டிக் அல்லாத பொருட்களால் செய்யப்பட்ட கை பைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் 2023 ஜூலை 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதற்காக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பை இல்லாத உலகம் சாத்தியம் என்பதையும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2023ஆம் ஆண்டு சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தடை செய்த உலகின் முதல் நாடு பங்களாதேஷ் ஆகும். விரைவில், இந்தியா உட்பட பல நாடுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தன. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம் 2023 நாள் என்பது உலகெங்கிலும் உள்ள பிளாஸ்டிக் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதை அகற்றும் நோக்கத்திற்காக பேக் ஃப்ரீ வேர்ல்டின் ஒரு முயற்சியாகும்.
சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம், இவ்வளவு பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத உலகம் சாத்தியம் என்பதை நிரூபிக்க பாதுகாப்பான மாற்று வழிகளைத் தேடுவதே இந்த நாளின் நோக்கம்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி முதல்வர், ஒருங்கிணைப் பாளர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டு தலின்படி மாணவர்கள் கிராம மக்கள் மற்றும் கடை உரிமையாளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் எம்.ஆர். மாணிக்கம் , தலைவர் எம்.ஏ. முருகப்பன், செயலாளர் மீனாள் முருகப்பன் மற்றும் புதுக்கோட்டை சிவபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள், கடைஉரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.