Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக சதுரங்க தினம்

புதுக்கோட்டை

குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக செஸ் தினம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப் பள்ளி குளத்தூர் நாயக்கர் பட்டியில் உலக சதுரங்க  தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் புண்ணியமூர்த்தி , பள்ளி மேலாண்மை குழு தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு உலக சதுரங்க  தினம் வரலாறு எடுத்து கூறப்பட்டது. சதுரங்கம் என்பது அறிவுசார்ந்த மற்றும் நம் மூளையின் செயல் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான விளையாட்டாகும்.  1924ம் ஆண்டு உலக செஸ் கூட்டமைப்பு பாரிஸ் மாநகரில் உருவாக்கப்பட்டதன் நினைவாக ஜூலை 20ம் தேதியை உலக சதுரங்க தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று 2019ம் ஆண்டு யுனெஸ்கோ முன்மொழிந்தது.

தற்போது பல்வேறு சதுரங்கம்  என்பது வெறும் பொழுதுபோக்குக்க விளையாடும் விளையாட்டு மட்டுமல்ல. அறிவியல் சிந்தனை, கணிதம், கூர்நோக்கு , அமைதி, பொறுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இதில் உள்ளன.

எனவே, இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதன் மூலம் யுனெஸ்கோ உலக அமைதி, சமத்துவம், பாலின ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வலியுறுத்துகிறது. நாடுகளில் முன்முயற்சியின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதன் மூலம் யுனெஸ்கோ உலக அமைதி, சமத்துவம், பாலின ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வலியுறுத்துகிறது. அதனை தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளான கபடி, கிரிக்கெட், நீளம் தாண்டுதல் லெமன் ஸ்பூன், கோகோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளை ஆசிரியர்கள் சிவசங்கரன், சாந்தகுமாரி, காளியம்மாள், வெள்ளையம்மாள், விஜயகுமார், தர்மபாய், ராதா அங்காளீஸ்வரி, சங்கர், முத்துலட்சுமி, இலக்கியா, பூபதி ரெகுநாதபுரம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாலா உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top