புதுக்கோட்டையில் மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை 76 -ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி- வினா போட்டி மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் அலுவலர் மன்றத்தின் வளாகத்தில் நடைபெற உள்ளது.
வினாடி வினா போட்டி 15. 8. 2023 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு அலுவலர் மன்றத்தில் நடக்க இருக்கிறது . இப்போட்டியில் கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொள்ளலாம் . இதில் பங்கேற்பதற்கு நுழைவு கட்டணம் கிடையாது.
பரிசுகள் முதல் பரிசு ரூபாய் 2000 -மும் இரண்டாம் பரிசு 1500 -மும் மூன்றாம் பரிசு ரூ. 1000 வழங்கப்படும். இப்போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவ, மாணவிகள், செயலர், அலுவலர் மன்றம், பழைய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை 622 001 -என்ற முகவரி அல்லது lecganesan@yahoo.co.in இணையதள முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். மேலும், பேராசிரியர் கணேசன்- 9786382393 செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.