Close
ஏப்ரல் 4, 2025 10:48 காலை

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதற்காகமாணவ,மாணவிகள்முதல்வருக்கு  நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம்  வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, கல்வியாளர்கள் மருத்துவர் சுவாமிநாதன் ,வார்டு உறுப்பினர் கலா ராணி, இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டனர்.

காலை உணவு திட்டம் முதன்மையாக மாணவ, மாணவியரின் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்கிறது. அடுத்ததாக மாணவ, மாணவியரின் பள்ளி வருகையை அதிகரிப்பதோடு அதை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதும், ரத்த சோகை குறைபாட்டை நீக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளைய வளமான வாழ்வுக்கான அடித்தளமாகும். இத்திட்டத்தால் மாணவர் களின் கற்றல் திறன் மேம்படும் உடல் நலன் உறுதிப்படும் . ஆரோக்கியமான மாணவர் சமுதாயம் உருவாகும். மாணவ,
மாணவிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின்,செல்விஜாய் வட்டார ஒருங்கிணைப்பாளர் கனகா,சமையலர் கள் நந்தினி, ரம்யா, தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top