கால் நடை மருத்துவம் படிக்க தேர்வான மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ. 20,000 ரூபாய் நிதியுதவியை டி.என்.பாளையம் திமுக ஒன்றியச் செயலாளர் எம். சிவபாலன் வழங்கினார்.
கோபி அருகே டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர் தர்ஷன், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் மற்றும் ஒரு மாணவர் தயானந்த், வீரபாண்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், கால்நடை மருத்துவப் படிப்பிற்காக தேர்வாகியுள்ளனர்.
இவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக டி.என்.பாளையம் ஒன்றிய திமுகச் செயலாளர் எம். சிவபாலன் ரூ. 20,000 நிதியுதவி வழங்கினார்.
நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் , ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேஸ்வரன் , மாவட்ட பிரதிநிதி திருமுருகன் , கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.