ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
அருங்காட்சியகத்துக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டைஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இன்று களப்பயணமாக புதுக்கோட்டை யிலுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அரசு அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர்.புதுக்கோட்டைஅருங்காட்சியகம் 1910 ஆண்டு புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்க பெற்றபழமையான அருங்காட்சியக மாகும்.
இங்குபதப்படுத்தப்பட்ட பல்லிகளும் பாம்புகளும் தொல்லியல் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நுழைவாயிலில் மிகப் பிரமாண்டமான டைனோசர் வரவேற்கிறது. காட்சிப்படுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களையும் பொருமையுடன் பார்த்து அவற்றுக்கான விளக்கங்களை ஆசிரியர்களிடம் கேட்டும் அறிந்து கொண்டனர்.
மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வெளியுலக அறிவைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் வயல்வெளி, நூலகம், உழவர் சந்தை, ரயில்வே நிலையம், அஞ்சலகம் என பல்வேறு இடங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிட அழைத்துச் செல்கிறோம் என்கிறார் பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி.
ஒருங்கிணைப்பாளர் கோமதிபிள்ளை, ஆசிரியர்கள் உதயகுமார், ராமன், ரம்யா, கலையரசி, ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க உதவி செய்தனர்.