Close
செப்டம்பர் 20, 2024 4:04 காலை

வேளாளர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்வி நிறுவனங்களின் முதலாண்டு தொடக்க விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்வி நிறுவனங்களின் கஸ்தூர்பா கலையரங்கில் நடைபெற்றது.

விழாவை வேளாளர் அறக்கட்டளைத் தலைவர் ஜெயகுமார், செயலரும், தாளாளருமான எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண், இணைச்செயலர் கே.வி.ராஜமாணிக்கம், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர். அறிவியல் மற்றும் மனிதநேயத்துறை தலைவர் எம்.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.

அறக்கட்டளைத் தலைவர் ஜெயகுமார் பேசியதாவது:1969 -இல் தொடங்கப்பட்ட வேளாளர் கல்வி நிறுவனங்கள் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளது.

பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியலின் படி தேர்ச்சி விகிதம், மாணவர் சேர்க்கை, பல்கலை. ரேங்க், தங்கப்பதக்கம் பெற்ற தலைசிறந்த 50 கல்லூரிகளில் வேளாளர் கல்லூரியும் ஒன்றாக விளங்குகிறது.

இந்திய அளவில் டிசிஎஸ், சிடிஎஸ், இன்போசிஸ், அக்சஞ்ஜர், எச்சிஎல், டிஎக்ஸ்சி, ரோபர்ட் பாஸ்க் உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களிலும், பெல், இஸ்ரோ உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களிலும் நம்முடைய மாணவிகள் பணிபுரிந்து வருகின்றனர்  என்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம்.ஜெயராமன் வாழ்த்தி பேசினர். கல்லூரி டீன் ஜெயசந்தர், துறைத்தலைவர்கள், நிர்வாக மேலாளர் என்.பெரியசாமி மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top