Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

“எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தில் பள்ளித் தூய்மை உறுதி ஏற்பு

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாதலைமையில் உறுதி ஏற்றுக்கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின்கீழ் பள்ளித் தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

புதுக்கோட்டை இராணியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டத்தின்கீழ், பள்ளித் தூய்மை குறித்த உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா  தலைமையில் (04.09.2023) பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். இதையொட்டி  பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை ஆட்சியர்  தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருக்கும் வகையில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி  புதுக்கோட்டை இராணியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மையான பள்ளி வளாகம், தனிப்பட்ட சுகாதாரம், சுகாதாரம், கை கழுவுதல், கழிவுப் பிரிப்பு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தின் முக்கியத்துவம் போன்றவைகள் குறித்து செயல்படுத்தப்பட்டது.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறையின் உதவியுடன் பள்ளி வளாகத்திற்குள் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையின் உதவி யுடன் பள்ளி வளாகத்திற்குள் திடக்கழிவு மேலாண்மைக்கு குழிகள் உருவாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளித் தோட்டம் அமைப்பதற்கு நிலத்தை தயார் செய்து விதைகள் விதைக்கப்பட்டது.

புதுக்கோட்டை
மரக்கன்று நட்டு வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

பள்ளித் தூய்மை உறுதிமொழியான, ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி”, இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படு வேன்.

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையினை ஏற்படுத்தமாட்டேன். மேலும், எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்வேன்.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழுமனது டன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன். மேலும், எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  வாசிக்க அதனை பின் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் வாசித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை),  ராஜேந்திரன் (தொடக்கக்கல்வி) (பொ), மாவட்ட தாய் சேய் நல அலுவலர்  சுகுணா, உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top