Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

குழந்தைகள் பாதுகாப்புக்குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுக்கோட்டை

புதுகை ஜெயராணி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் நலக்குழு வின் விழிப்புணர்வு கருத்தரங்கம்

குழந்தை திருமணம் ஒழிப்பு, மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை, மேட்டுப்பட்டி அருகே உள்ள ஜெயராணி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்து வருவதை தடுப்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்வு பள்ளி தாளாளர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் கே. சதாசிவம் சிறப்புரையாற்றினார்.தற்காப்பு கலை மாஸ்டர் கார்த்திகே யன் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை குறித்து  செயல் விளக்கப்பயிற்சியளித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு குழு சார்பில் மாணவ மாணவி களுக்கு,குழந்தை திருமணம் ஒழிப்பது, மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தக் கூடாது.பள்ளிக்கு செல்லும் போதும் திரும்பி வரும் போதும் பாதுகாப்பாக செல்வது குறித்தான விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் போது தற்காத்துக் கொள்வது எப்படி என்பது தற்காப்பு கலை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது

குழந்தைகள் கடத்தல் குறித்தும் இடை நின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் பிச்சை எடுக்கும் குழந்தை களை கண்டறிந்து விடுதியில் சேர்த்து கல்வி பயிலவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் சைல்ட் லைன் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனியம்மாள், தற்காப்பு கலை மாஸ்டர் கார்த்திகேயன், வழக்கறிஞர் மற்றும் உறுப்பினர் கிருத்திகா, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

செயல் விளக்கம் செய்து காண்பித்ததை மாணவ, மாணவிகள் தத்ரூபமாக  திருப்பிச் செய்து காண்பித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top