புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிணி அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றிவரும் இ. அபிராமசுந்தரி மேல்நிலைவகுப்பு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து மேல்நிலை பொதுத்தேர்வில் தொடர்ந்து நூறுசதவீதம் தேர்ச்சியை உறுதிப்படுத்துகின்றார்.
மேலும் தன்னுடைய கணிணி அறிவியல் பாடத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக 20 -க்கும் மேற்பட்ட மாணவர் களை நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்து பெற்றோர் கள் மற்றும் பொதுமக்களின் பாரட்டுகளைப் பெற்று வருகின்றார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம், மற்றும் ரோட்டரிசங்கங்கள் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளன. மாணவர்களை கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளார்.
பல்வேறு வகையில் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆசிரியை அபிராமசுந்தரிக்கு, செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்தனர்.
நல்லாசிரியர் விருதுபெற்று பள்ளிக்கு வருகை புரிந்த ஆசிரியை அபிராமசுந்தரிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர்தங்கம் மூர்த்தி மாலை அணிவித்து, பரிசுகள் வழங்கிவாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி, சிஇஓ- காவியாமூர்த்தி, பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் ஆகியோர் பொன்னாடை அணிவித்து விருது பெற்ற ஆசிரியை அபிராமசுந்தரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக பள்ளிக்கு வருகை தந்ததங்களின் ஒருங்கிணைப் பாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைக்கு மாணவ, மாணவிகள் ஆரத்தி எடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.