ஈரோட்டில் நந்தா மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா (9.9.2023) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது.
ஈரோடு, பெருந்துறை சாலையில் பிச்சாண்டாம்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நந்தா மருத்துவக் கல்லூரி யின் கட்டிடத் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியின் தொடக்க விழா சனிக்கிழமை 9 -ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
கல்லூரி வளாகத்தில் உள்ள என்எம்சிஎச் அகாடமிக் கட்டிடத்தில் நந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதன்மை விருந்தினராக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைக்கிறார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்வி மற்று்ம் ஆராய்ச்சி நிலையத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.நந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் ஏ.சந்திரபோஸ் வரவேற்புரையாற்றுகிறார். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுந்தரவேல் நன்றியுரையாற்றுகிறார்.
மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக ரூ.1499 –மதிப்புள்ள முழு உடல் பரிசோதனை சலுகைக் கட்டணமாக ரூ.750-க்கு மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
# செய்தி- ஈரோடு மு.ப.நாராயணசுவாமி #