பாரதியார் நினைவு நாளில் அவரது உருவப்படத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலையர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
புதுக்ககோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு மழலை மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் அவர்கள் இனி பாரதியார் நினைவுநாள் “மகாகவி நாள்” என்று கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு செய்திருக்கின்ற இத் தருணத்தில் ஸ்ரீ வெங்கடேஸ் வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மழலையர்கள் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பாப்பாவுக்கு பாட்டுச் சொன்ன பாரதி “பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று சின்னஞ்சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கண்டு பயந்து நடுங்காமல் தைரியத்தோடு எதிர்கொள்ளும் வகையில் பாடல்கள் புனைந்த பாரதியை அவரது நூற்றாண்டு நினைவு நாளில் மழலைக் குழந்தைகள் மலர்தூவி வண்ங்குவது சாலப் பொருத்தமாக அமைந்திருந்தது. நிகழ்வில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு பாரதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.