Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

தற்கொலை செய்வது கோழைத்தனம்: மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறார், முன்னாள் அமைச்சர், கோபி எம்எல்ஏ -செங்கோட்டையன்

தன்னம்பிக்கை இல்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன்.

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 54 மாணவ, மாணவி களுக்கு விலைஇல்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில்  கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று வரை 59 லட்சத்து 34,000 மாணவர் களுக்கு மிதிவண்டி வழங்குகிற திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு தலைவர்களும் திட்டங்களை கொண்டு வரும் போது மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கித்தான் தங்கள் தொலை நோக்கு சிந்தனையை செயல்படுத்தியுள்ளனர்..

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்கள் மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறையுடனே அரசியல்  பயணங்களை மேற்கொண் டுள்ளனர்.

மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு தலைவர்களும் கல்விக் காகவே பல்வேறு முக்கிய திட்டங்களை வகுத்தனர்.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை வேண்டும்.மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் தற்கொலை செய்து கொள்வது  கோழைத்தனம் மாணவர்கள் அனைவரும் தங்களது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குறிச்சிநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top