புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர் .சிவி .
ராமன் பிறந்த தினமும், குழந்தைகள் பாதுகாப்பு தினமும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா சர். சி. வி. ராமன் வாழ்க்கை வரலாறு குறித்து பேசியதாவது:
சர்.சி.வி.ராமன்நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சர்.சி.வி.ராமன். கடந்த 1888 -ஆம் ஆண்டு நவம்பர் 7 -ஆம் தேதி பிறந்தார். இவர் ஒளியின் மூலக்கூறு சிதறல் என சொல்லப்படும் ‘ராமன் விளைவு’ கோட்பாடு என்ற ஒன்றை மிகுந்த சிரமங்களுக்கு இடையே கண்டுபிடித்தார்.
இது புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை கண்டறிதல் என பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது.
திருச்சியில் பிறந்த சர்.சி.வி.ராமன் அவரது ராமன் விளைவை அறிவித்த பிப்ரவரி 28 -ஆம் தேதி “அறிவியல் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன் என்பதால் அவரை கௌரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக மழைக்காலங்களில் இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு வர வேண்டும் என்றார் அவர். இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் பிரியங்கா,ஜனனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.