Close
நவம்பர் 22, 2024 5:58 காலை

கந்தர்வக்கோட்டை ஒன்றிய கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் நடந்த தேசிய நூலக வார விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப் பட்டது.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கலந்து கொண்டு வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கி பேசும் பொழுது:

ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது. புத்தகத்தில் திருவிழா வினை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விதமாக புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் வாசித்து பயனடைந்து வருகின்றனர்..அதுபோல தினந்தோறும் மாணவ, மாணவிகள் வாசிக்க வேண்டும் என்றார் அவர்.

தேசிய நூலக வார விழாவுக்கு தலைமை வகித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தேசிய நூலக வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நூலக வார விழாவில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் நூலக பயன்பாட்டினை அறிந்து கொள்ள வேண்டும்.

நூலகங்களுக்கு சென்று நூல்களைப் படிக்க வேண்டும். கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் 35 ஆயிரத்து மேற்பட்ட நூல்களும், தினசரி 10 செய்தித்தாள்களும், மாதம்தோறும் பருவ இதழ்கள் 100 க்கு மேற்பட்ட இதழ்களும் வருகிறது. இந் நூலகத்தை கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு நூலகத்தில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள்ள நூல்களை கிளை நூலகர் வனிதா அறிமுகம் செய்தார். அனைவரும் ஆர்வமுடன் வாசித்து மகிழ்ந்தனர். மாணவர்கள் நூலகங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நூலகத்திற்கு வருவதாகவும், தினந்தோறும் வெளிவரக்கூடிய செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை வாசிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், இல்லம் தேடிக் கல்வி மைய கந்தர்வகோட்டை ஒன்றிய தன்னார்வலர்கள் குணசுந்தரி, சரஸ்வதி,மாலினி, இலக்கியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக கிளை நூலகர் வனிதா அனைவரையும் வரவேற்றார். சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top