Close
நவம்பர் 21, 2024 10:07 மணி

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற குழந்தைகளுடன் பள்ளி தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ. கதிரேசன்

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது

புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள   ஈரோ கிட்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது   விழாவிற்கு    பள்ளியின்     தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ .கதிரேசன் தலைமை வகித்தார்.முதல்வர் தேவிகீர்த்தனா  அனைவரையும்   வரவேற்றார்.

குழந்தைகளின் கண்ணைக் கவரும் நடனங்கள். நாடகம்  நடைபெற்றது.  பள்ளி வளாத்தில் அமைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது .

இந்த மரத்தை பெற்றோர்களும் மாணவர்களும்  கண்டு களித்தனர். கிறிஸ்துமஸ்  தாத்தா எனும் சான்டாகிளாஸ் ஒவ்வொரு  மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  வாழ்த்துகளை தெரிவித்தார்.குழந்தைகள்   சான்டாகிளாஸ் தாத்தாவோடு கைகுலுக்கி இனிப்புகளை பெற்று மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை
கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கைகுலுக்கும் குழந்தைகள்

பள்ளியின்தாளாளர்கவிஞர் ஆர்எம்வீ.கதிரேசன் பேசுகையில்,  கருணையே     வடிவான இயேசு பிரான் அவதரித்த  தினத்தை கொண்டாடுவது என்பது ஒட்டு மொத்த மனித குலத்துக் குமான செய்தியாகிய அன்பு கருணை, ஒழுக்கம், சக உயிர்களை நேசித்தல் ஆகிய பண்புகளை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்துவதேயாகும்.

இயேசுபிரானின் அன்புக் கட்டளைகளுள் ஒன்றான  உன்னிடத் தில் நீ அன்பு கூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவா என்கின்ற கருத்தை  குழந்தைகள் மனதில் ஏற்றி சக மாணவர்களிடம் அன்புசெலுத்த வேண்டும் என்று தெரிவித் தார். விழாவில் , ஆசிரியர்கள் பெற்றோர்கள்  கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top