Close
நவம்பர் 24, 2024 4:14 மணி

கந்தர்வகோட்டை அருகே தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள்

கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள் கடைபிடிக்கப் பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மருங்கூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் புனைக்கதைகள் நாள்  கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் தலைமை ஆசிரியர் துரையரசன்  வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமத்துல்லா தேசிய அறிவியல் புனைக்கதைகள் குறித்து பேசியதாவது:

பிரபலமான அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவின் பிறந்தநாளைக் குறிக்கும் ஜனவரி 2 -ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் புனைகதை தினத்தை கொண்டாடுகிறது .
இந்த நாள் கொண்டாட்டம் உலகம் முழுவதும் உள்ள அறிவியல் புனைகதை பிரியர்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இலக்கிய வகைக்கு அசிமோவின் முன்மாதிரி யான பங்களிப்புகளுக்கு இந்த நாள் நினைவூட்டுகிறது.

இது தவிர, ரோபோ சைக்காலஜி, பாசிட்ரானிக், சைக்கோ ஹிஸ்டரி போன்ற பல பிரபலமான சொற்களை அசிமோவ் உருவாக்கினார். ஐசக் அசிமோவ் ரோபோடிக்ஸ் மூன்று விதிகளையும் அறிமுகப்படுத்தினார்.தங்களுக்கு பிடித்த அறிவியல் புனைகதை நாவல்களை வாசிக்கலாம் என்றார் அவர்.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் செந்தமிழ் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top