20- ஆவது சர்வதேச அபாகஸ் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றனர்
சென்னையில் இயங்கிவரும் அமாட்டா நிறுவனம் 20 – ஆவது சர்வதேச அபாகஸ், வேதிக் மேக்ஸ், போட்டிகளை நடத்தியது. இதில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பா.சஞ்சித் பாபு, மாஃபிக் ஜியான் ஆகியோர் சேம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றார்கள்.மூன்றாம் வகுப்பு மாணவன் பா.சுர்ஜீத்பாபு டாப்பர் பரிசு வென்றார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் புதுக்கோட்டை மாணவர்கள் உயர்ந்த இடத்தைப் பெற்றதை பலரும் பாராட்டி னார்கள்.
தங்கள் வெற்றிக்கு நாங்கள் தினசரி மேற்கொண்ட தொடர் பயிற்சியும், பள்ளி நிர்வாகமும், தலைமை பயிற்சியாளரும் எங்களுக்கு கொடுத்த உற்சாகமும், நம்பிக்கையுமே காரணம் என்று வெற்றி பெற்ற மாணவர்கள் குறிப்பிட்டார்கள்.
வெற்றிக் கேடயமும், சான்றிதழும் பெற்று வந்த மாணவர் களை முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், மகாத்மா நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன்,
ஆத்மா யோகா மைய நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், ஆத்மா அபாகஸ் தலைமை பயிற்சியாளர் யோகா புவனேஸ்வரி பாண்டியன், துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கினைப்பாளர் கௌரி, உதயகுமார், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.