Close
நவம்பர் 21, 2024 10:04 மணி

கந்தர்வகோட்டையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பருக்கை விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலே பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்று இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: நாட்டின் முதல் பெண்ணிய சின்னமாக கருதப்படும் சாவித்ரிபாய் பூலே என்பவர் தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்தவாதி யாகவும் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாள ராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார்.

1831 ஜனவரி 3 -ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில் விவசாய குடும்பத் தில் பிறந்த இவர், லட்சுமி மற்றும் கண்டோஜி நெவேஷே பாட்டீல் தம்பதியின் மூத்த மகள் ஆவார். அந்த கால வழக்கப் படி சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலேவை 1840 -ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

ஜோதிராவ் புலே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ்.

சாவித்ரிபாய் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், பின் அகமதுநகரிலுள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அதனை தொடர்ந்து புனேவில் மற்றொரு ஆசிரியரின் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்று படித்தார்.
மகர்வாடாவில் ஒரு புரட்சிகர பெண்ணியலாளரும், தன் கணவரது வழிகாட்டியான சகுனாபாயுடன் சேர்ந்து குழந்தைகளுக்குகற்பிக்கத் தொடங்கினார்.

சில நாட்களில் சாவித்ரிபாய், ஜோதிராவ்ங மற்றும் சகுனா பாய் ஆகியோர் இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை தொடங்கினர். 1848ம் ஆண்டில் துவக்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியராக பொறுப்பேற்ற சாவித்ரிபாய், குழந்தைகள் படிப்பை தொடர ஊக்க தொகையும் வழங்கினர். மேலும் இதுபோன்றே குழந்தைகளுக்கானமேலும் 18 பள்ளிகளையும் அடுத்தடுத்து தொடங்கினர்.

இந்திய சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கவிஞரான சாவித்ரிபாய் பூலே, மார்ச் 10, 1897 அன்று புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாட்டின் முதல் நவீன பெண்ணியவாதியாகப் போற்றப்பட்ட ஃபுலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆவார் என்று பேசினார்.நிறைவாத தன்னார்வலர் சத்யா நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top