Close
அக்டோபர் 5, 2024 7:19 மணி

கந்தர்வகோட்டை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக பிரெய்லி தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த உலக பிரெய்லி தினம்

கந்தர்வகோட்டை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக பிரெய்லி தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர பாதுகாப்பு மையத்தில் உலக பிரெய்லி தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன்  வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் உலக பிரெய்லி தினம் குறித்து பேசியதாவது:

பார்வைத்திறன் இல்லாதவர்கள் படிக்க உதவுவது பிரெய்லி முறைதான். இந்த முறையை கண்டறிந்தவரான பிரெய்லியின் பிறந்த நாளில் தான் உலக பிரெய்லி தினமும் கொண்டாடப் படுகிறது.

பிரெய்லி என்பது பார்வையற்றவர்களால் பயன்படுத்தப்படும் தொடுதிறன் எழுத்து முறையாகும். பொறிக்கப்பட்ட காகிதத்தில் அல்லது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களுடன் இணைக்கும் புதுப்பிக்கக்கூடிய பிரெய்லி டிஸ்ப்ளேக்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதைப் படிக்கலாம்.

ஸ்லேட் மற்றும் ஸ்டைலஸ், பிரெய்லி ரைட்டர், எலக்ட்ரானிக் பிரெய்லி நோட்டேக்கர் அல்லது பிரெய்லி எம்போசருடன் இணைக்கப்பட்ட கணினியைப் பயன்படுத்தி பிரெய்லி எழுதலாம் என்று பேசினர். இந்நிகழ்ச்சியில் தீபா, உதவியாளர் தாமரைச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top