புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை நேரில் சந்தித்தனர்.
புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளாவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த் துகள் தெரிவித்து 2024 ஆம் ஆண்டுக்கான சங்க நாட்காட்டி யை வழங்கினார்கள்.
பின்னர், புதுக்கோட்டை கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்நிகழ்வில் மாநிலத்துணைத் தலைவர் எஸ். வளர்மதி, மாவட்டத்தலைவர் முத்துச்சாமி, மாட்டச் செயலாளர் தண்டா யுதபாணி, மாவட்ட பொருளாளர் நாகேந்திரகுமார்,
ராஜ்மோகன், தனசேகரன்,முகமதுகனி, வேல்முருகன்,ரமேஷ், சத்தியநாராயணன், பாஸ்கரன், மஞ்சுநாதன்,துரை. கணேசன், கைலாசமூர்த்தி, ஆல்வின்,சசிக்குமார், சரவணன், மதன்,இளையராஜா, தனலட்சுமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.