Close
அக்டோபர் 5, 2024 7:21 மணி

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் கற்பித்தல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதில் பயிலும் கற்போர்களுக்கு கற்பித்தல் உபகரணங்களான சிலேட்டுகள் , நோட்டுகள், பென்சில், ரப்பர், பேனா, எழுது குச்சிகள் போன்றவை வழங்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் உபகரணங்களை வழங்கி பேசியதாவது:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள எழுதப் படிக்காத தெரியாதவர்களுக்கு எழுதப் படிக்க தன்னார்வலர்கள் கற்பித்து வருகின்றனர். தற்போது வழங்கப்படும் கற்பித்தல் உபகரணங்களை கற்போர்கள் பயன்படுத்தி பயன்பெற ஊக்கப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர் பயிற்றுநர் ராஜேஸ்வரி, இயன்முறை மருத்துவர் சரண்யா சிறப்பாசிரியர்கள் ராணி,ராதா, பிரியா கணக்காளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top