Close
ஜூலை 8, 2024 8:52 காலை

கந்தர்வகோட்டை அருகே கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடந்த பேச்சுப்போட்டி

கந்தர்வகோட்டை அருகே கோவில்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கோவில்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற்றது.

இப் போட்டியை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தொடங்கி வைத்து பேசியதாவது:

மாணவர்கள் பொது அறிவு புத்தகங்கள், திருக்குறள் , வரலாறு, அரசியல், அறிவியல் நூல்களையும், பெரியார் ,காந்தி ,நேரு, காமராசர்,அண்ணா, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றையும், இலக்கியம் தொல்லியல், தினசரி செய்தித் தாள், மாத இதழ்கள் வாசிக்க வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்து வாசிப்பதால் எதிர்காலத்தில் சிறந்த மனிதராக உயர் முடியும். அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் உள்ள நூலக புத்தகங்களை நூல்களை வாசிக்க வேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், மகாத்மா காந்தி, பள்ளி தூய்மை உறுதிமொழி, வ உ சி சிதம்பரனார், இந்தியாவின் பெருமை, தேசியக்கொடி உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார்கள்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குடியரசு தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது.  போட்டிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் இலக்கியா, சிவகாமி கெளதமி ராதிகா உள்ளிட்டோ செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top