புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
ஜனவரி 30 மகாத்மா காத்தி மறைந்த தினமான மாவீரர் தினத்தையொட்டி பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியானது மாணவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணவர்களிடையே சாதிய வேற்றுமை பாராட்டுதலை ஒழித்தல்,
மாணவர்கள் மத்தியில் சகோதர உணர்வை மேம்படுத்துதல் மற்றும் அன்பையும் பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்த்தல் குறித்து உறுதிமொழி யினை புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியில், பள்ளி முதல்வர் பெ.சிவப்பிரகாசம் அவர்கள் தலைமையில் மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழியினை உடற்கல்வி ஆசிரியர் சரவணன் அவர்கள். வாசிக்க மாணவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம், ஆசிரியர்கள் நாடிமுத்து, இயலரசன், கவிதா, ரவி, பிரகாசம் ஆகியோர் செய்திருந்தனர்.