கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புக்கான (உதவித் தொகை) மாதிரித் தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிஅக்கச்சிப்பட்டியில் நடைபெற்ற என். எம். எம். எஸ் மாதிரி தேர்வினை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி , அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் நடைபெற்ற தேர்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
வட்டாரத் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார் வட்டாரப் பொருளாளர் தங்கராசு வாழ்த்துரை வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி , ஆசிரியர்கள் மணிமேகலை, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், கந்தர்வகோட்டை ,காட்டு நாவல் சுந்தம் பட்டி, மட்டங்கால், மோகனூர், மங்கனூர், சோழகம் பட்டி, விராலிப்பட்டி, மஞ்சப்பேட்டை, பழைய கந்தர்வகோட்டை, குரும் பூண்டி, சங்கம் விடுதி, கெண்டையம்பட்டி, கொத்தகப்பட்டி, பகட்டுவன்பட்டி, மெய்குடிப்பட்டி , அரசு உயர்நிலைப்பள்ளி, ஆத்தங்கரை விடுதி, கோமாபுரம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 247 மாணவர்கள் மாதிரி தேர்வினை எழுதினார்கள்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டு தோறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் .
ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப் படுகிறது. இத்தேர்வு மனத்திறன் தேர்வு, படிப்பறிவுத் திறன் தேர்வு என இரண்டு பகுதிகளை கொண்ட தேர்வாகும். வருகிற பிப் -4 தேதி தமிழ்நாடு முழுவதும் என். எம். எம் எஸ் நடைபெற இருக்கிறது.
இத் தேர்வுக்கான முன்னோட்டமாக கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாதிரி தேர்வு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதவும் ஊக்குவிக்கப்பட்டது.இத் தேர்விற்கான ஏற்பாடுகளை ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.