Close
ஜூலை 4, 2024 6:34 மணி

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சிவில் துறை மாணவர் மன்றம் தொடக்கம் 

புதுக்கோட்டை

திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிவில் மாணவர் மன்றத் துவக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சிவில்துறை மாணவர்மன்றம்தொடக்கவிழா (பிப்-2) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் சிவில் துறைத் தலைவர் டாக்டர் செல்வக்குமார் வரவேற்றார். முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு விழாவுக்கு தலைமை வகித்துப் பேசினார். சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் முத்துக்கண்ணாள் அறிமுகம்செய்துவைத்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக சிவில் துறை இயக்குநர் டாக்டர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :

மற்ற துறை பொறியாளர்களைவிட  சிவில்துறை பொறியாளர் களுக்கு ஏராளமான சமூகப் பொறுப்புகளும், கடமை களும் உள்ளன. அரசு மற்றும் தனியார்  முன்னின்று வடிவமைப்பதும், அதனைச் செயல் படுத்துவதும் சிவில் துறை பொறியாளர்கள்தான்.

மேலும் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமலும், பேரிடர் காலங்களில் அவர்கள் எளிதில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் வகையிலும் கட்டுமானங்களை சிவில் பொறியாளர்கள் வடிவமைக்க வேண்டும். இன்று ஏராளமான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் போக்கினை அறிந்தும் சமூக நலன் கருதியும் சிவில் பொறியாளர்கள் செயல்பட வேண்டும்.

இன்று ஏராளமான புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. அவற்றை எல்லாம் சிவில் துறை பொறியாளர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். உலக அளவில் இன்று ஏராளமான பணி வாய்ப்புகள் சிவில் துறை பொறியாளர் களுக்கு உள்ளன. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.

நிறைவாக மாணவர் மன்றத் தலைவர் பரத்வாஜ் நன்றி கூறினார்.இவ்விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top