புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா, பல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக் கு பரிசளிப்பு விழா அழகம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை குளத்தூர் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா, பல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்
மகாத்மா பள்ளி தாளாளர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். ஆலோசகர் நீலாவதி ராஜ்மோகன் மற்றும் பேராசிரியர் அய்யாவு, பேராசிரியர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் மழலையர் குழந்தைகளுக்கான பட்டங்களை வழங்கி பேசினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள், நற்சான்றிதழ்களை மண்டலத்தலைவர் அன்பு தனபாலன், கல்வியாளர்கள் பேராசிரியர் அய்யாவு, பேராசிரியர் பழனிசாமி, செல்லத்துரை, பரமசிவம் உள்ளிட்டோர் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.
நிகழ்வில், கவிஞர் தங்கம்மூர்த்தி, அரசுவழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பட்டம், பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில், பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் செய்தனர். முன்னதாக அனைவரையும் மகாத்மா மழலையர் தொடக்கப் பள்ளி மழலையர்கள் வரவேற்றனர்.