திருமயம் ஊராட்சி மணவாளன்கரை பகுதியில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110 -ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சிக்குள்பட்ட மணவாளன்கரையில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2023-2024 -ஆம் ஆண்டு குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதலாத இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை திருமயம் ஊராட்சித் தலைவர் எம். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருமயம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.பி. சரவணன், ஊராட்சி உறுப்பினர்கள் வீரமணி, ஏகம்மை, காந்திமதி, தணிக்கையாளர் பழனியப்பன், பள்ளித்தலை மையாசிரியர் சிங்காரராதிகா, ஊர் முக்கிய பிரமுகர்கள் பன்னீர்செல்வம், கருப்பையா, ஏகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.