Close
ஜூலை 2, 2024 3:00 மணி

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணல் : 35 மாணவர்களுக்கு பணி வாய்ப்பு

புதுக்கோட்டை

சண்மூகநாதன் பொறியியல் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் இறுதியாண்டு மாணவர்கள் 35 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வளாக நேர்காணல் நடத்தி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நடப்புக் கல்வியாண்டில் இரண்டாவது முறையாக 3 நிறுவனங்கள் கலந்து கொண்ட வளாக நேர்காணல்  நடைபெற்றது.

விழாவுக்கு  முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு விழாவுக்கு தலைமை வகித்துப் பேசினார். வந்திருந்த அனைவரையும் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் முத்துமாணிக்கம் வரவேற்றார்.

புதுக்கோட்டை
 வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்குகிறார் கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் . உடன், கல்லூரி முதல்வர் குழ.முத்துராமு, நிறுவன மனிதவளத்துறை மேலாளர்கள்

சென்னை டாக்கோ மெகாகன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் மற்றும் சட்ட ஆலோசகர் வில்லியம், எச்.என்.ஒய். ஆட்டோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவன மனித வளத் துறை மேலாளர் பார்த்திபன், டோங்க் ஆ எல்க்ட்ரிக் இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மனிதவளத்துறை மேலாளர் நடராஜன் ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தேர்வு முறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

புதுக்கோட்டை
 கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டனிடம் பணிநியமன ஆணை பெறும் மாணவி

பின்னர் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகள் 35  பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணிநியமன ஆணைகளை கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் வழங்கி வாழ்த்தினார். நிறைவாக மின்னியல் மற்றும் மின்ணுவியல் துறைத் தலைவர் டாக்டர் வரதராஜன் நன்றிகூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top