Close
அக்டோபர் 5, 2024 7:27 மணி

புதுகை கேகேசி அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் பயிற்சி முகாம்.

புதுக்கோட்டை

கேகேசி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு பரிசளிக்கிறார், புதுக்கோட் டை  மாவட்ட ரெட்கிராஸ் இணைச் செயலாளர் சா. விஸ்வநாதன்

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி(கேகேசி), யூத் ரெட்கிராஸ் (இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்) தன்னார்வத் தொண்டர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முகாமில் பயிற்றுனராகக் கலந்து கொண்ட, புதுக்கோட் டை  மாவட்ட ரெட்கிராஸ் இணைச் செயலாளர் சா. விஸ்வநாதன், ரெட்கிராஸின் தோற்றம், அதன் கோட்பாடுகள், உலக அமைதிக்கு ஆற்றும் பணிகள், யூத் ரெட்கிராஸின் தோற்றம் அதன் கோட்பாடுகள், அதன் பணிகள் யாவற்றைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

1864 ல் ஜீன் ஹென்றி டுனாண்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டவரால் , போரில் காயமுற்ற வர்களுக்கு உதவி செய்ய தொடங்கப்பட்ட ரெட்கிராஸ், இன்று போர் இல்லாத காலத்திலும், எங்கெல்லாம் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகி றதோ அங்கெல்லாம் சென்று உதவக்கூடிய , உலகின் மிகச்சிறந்த மனிதாபிமானச் சங்கமாகச் செயல்பட்டு வருகிறது. உக்ரைன், காஸா போன்ற போர் நடைபெறும் இடங்களில் இப்போதும் காயமுற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமானச்சேவையைச் செய்து கொண்டிருக்கிறது.

மனிதாபிமானம், தன்னார்வத் தொண்டு உள்ளிட்ட ஏழு கொள்கைகளைக் கொண்டு செயல்பட்டுவருகிறது ரெட்கிராஸ். இளைஞர்களை நல்ல தன்னார்வ தொண்டர் களாக உருவாக்குவதற்காக கல்லூரிகளில் தொடங்கப்பட்டது தான் யூத் ரெட்கிராஸ். உடல் நலம், சேவை, நட்புணர்வு என்ற மூன்று முக்கிய கோட்பாடுகளைக் கொண்டதுயூத்ரெட்கிராஸ்.

சேவை செய்வதற்கு உடல் நலம் அவசியம். ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தீய பழக்கங்கள் தங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சேவை மனிதர்களை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும். அதன் மூலம் நட்புணர்வு வளரும். அது சமூகம் மேன்மையுற உதவும். எனவே யூத் ரெட்கிராஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் சேவை மனப்பாண்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகம் மேன்மையுற உதவ வேண்டும் என்றார் அவர்.

 நிறைவாக யூத்ரெட்கிராஸ் உறுதிமொழியையும், அப்துல் கலாமின் மாணவர்களுக்கான 10 உறுதிமொழிகளையும் தன்னார்வ தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். மேலும் சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கு நூல்கள் பரிசாக வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் மாலதி செய்திருந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top