Close
ஜூலை 7, 2024 11:12 காலை

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்வழங்கிய முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்ட மாணவர்க ளுக்கு முதன்மை கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா சான்றிதழ்களை வழங்கினார்

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் பயிற்சி முடித்த காமராஜபுரம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இத்திட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல்வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களையும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென  கேட்டு கொண்டுள்ளார்கள்.

அது இத்திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். விடுமுறை நாட்களில் மற்றும் வேலை நாட்களில் மாலை நேரங்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களின் அறிவியல் அறிவையும், அறிவியல் மனப்பான்மையையும் மேம்படுத்த இத்திட்டம் மிக்க உதவியாய் அமையும்.

மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்திட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும் கல்வித்துறை நல்கும் என்றார் அவர்.

இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் மாணவர்கள் தயாரித்து வைத்திருந்த அறிவியல் திட்ட விளக்க மாதிரிகளை பார்வையிட்டு பாராட்டினார்.

அதில், இரண்டு மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து செங்கல் தயாரித்திருந்தது  பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சாலை செந்தில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், காமராஜபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.வெள்ளைச்சாமி, கவிஞர்.மு.கீதா, திருவப்பூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

மாணவர்கள் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தில் தாங்கள் புதிதாக கற்றுக்கொண்டவைகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆசிரியர் பி.மீனா அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர் சி.பிரிட்டோ நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top