புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை பூங்காநகர் குமாரராஜா மழலையர் தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் பி.கருப்பையா தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் எஸ் அன்னபூரணி முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை பட்டிமன்ற நடுவர் மஹாசுந்தர் கலந்து கொண்டு பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மழலையர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் விருதுகள், நற்சான்றிதழ்களும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியைகள் ஆர் .பார்கவி,எஸ் கிரிஷாம்பாள், பி.மேனகா, எஸ்.பி
பின்னர் அவர் பேசியதாவது: குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை பெற்றோர்கள் தங்கள் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மாணவர்களை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து பெற்றோர்கள் கேட்க வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளோடு அன்பாக நட்பாக பேசிப் பிள்ளைகளின் வெற்றியை உறுதி செய்வது பெற்றோர்களின் கைகளின்தான் உள்ளது. பள்ளியை விட்டு வீடு வந்து சேரும் குழந்தைகளிடம் பெற்றோர் .தங்களது வேலைகளை ஒதுக்கி வைத்துதினமும் இரண்டு மணி நேரம் பாடங்களை கற்கசெய்ய வேண்டும் என்றும் றினார்.
பின்னர் மழலையர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நடனங்கள் பரதநாட்டியம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் யோகாசனம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன .விழாவில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மாணவ , மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக ஆசிரியை ஆர் பார்கவி வரவேற்றார். நிறைவாக பள்ளியின் ஆசிரியை பி.மேனகா நன்றி கூறினார்.விழா ற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்தனர்