Close
நவம்பர் 21, 2024 10:27 மணி

இராமானுஜர் கணித மன்றம் சார்பில் உலக பை(π) தினம்

புதுக்கோட்டை

அக்கச்சிபட்டி பள்ளியில் நடைபெற்ற உலக பை -தினம்

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் இராமானுஜர் கணித மன்றம் சார்பில் உலக பை(π) தினம் கடைபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி ராமானுஜர் கணித மன்றம் சார்பில் உலக பை தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.இதில், புதுக்கோட்டை மாவட்ட துளிர் திறனறிவுத் தேர்வு இணை ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா உலக பை(π) தினம் குறித்து பேசியதாவது
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 14-ம் தேதி உலக  பை(π)  தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1988-ல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் π என்கிற மிக முக்கிய எண் தோன்றுகிறது. இயற்கையில் பெரும்பாலான பொருட்கள் வட்ட வடிவத்தில் காணப்படுவதால் இயற்கையோடு பை(π) பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறலாம்.
என்ற எண்ணைக் கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதர்கள் பயன்படுத்தி யுள்ளார்கள். எனவே கணிதத்தில் தோன்றும் எண்களில் அதிக அளவு பயன்படுத் தப்பட்ட எண்ணாக விளங்குவது, இதன் தனிச்சிறப்பு. பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் பை(π) எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது.

கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின் மேற்பரப்பு, கொள்ளளவு மதிப்புகளில் π காணப்படுகிறது. இதனால் π -ன் மதிப்பு, கோள்களின் சுழற்சிக் காலம், ஓர் ஊசலின் கால அளவு, அதிகபட்சத் தரவு மதிப்புகள், நிகழ்தகவு மதிப்புகள் போன்ற எண்ணற்ற விஷயங்களுக்குப் பயன்படுகிறது என்றார் அவர்.

இந்நிகழ்வில் ஆசிரியர் சிந்தியா, செல்வி ஜாய், தற்காலிக ஆசிரியர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top