Close
நவம்பர் 22, 2024 1:18 காலை

கந்தர்வகோட்டை அருகே கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பங்கேற்று சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் குறித்து பேசியதாவது:

சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 2 -ஆம் தேதி வாசிப்பை வலியுறுத்தியும், உலகளவில் புத்தகங்கள் மீது குழந்தைகளுக்கு காதலை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவரின் பிறந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை படித்தவர்களாகவும், புத்தகம் வாசிப்பவராகவும் ஆவதற்கு ஊக்குவிக்கிறது. இளைஞர்களுக்கான சர்வதேச புத்தக மையம் இந்த நாளை ஒருங்கிணைக்கிறது.
புத்தகங்கள் மூலம் குழந்தைகள் பல கோணங்களை பார்க்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அவர்களின் கற்பனைத்திறன் வளர்கிறது. அவர்கள் நீண்ட நாள் வாசிப்பதன் அறிவாற்றல் வளர்கிறது. கதைசொல்லல் என்பதன் மூலம் அவர்கள் கற்பனையை வளர்த்துக்கொள்வது அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது என்று பேசினார். முன்னதாக தன்னார்வலர் சர்மிளா அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வில் தன்னார்வலர் தீபா,கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top